தாவரங்களில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை பெரும்பாலும் இலைகள், தண்டு மற்றும் பழங்களில் வெளிப்படையான அறிகுறிகளாகத் தோன்றும்.

Micronutrient deficiency in plants often appears as visible symptoms on leaves, stems, and fruits.

12 மே, 2026Avinya Infotech
போரான் - Boron: 
இலை மொட்டுகளின் நிறமாற்றம், முனைகளில் உள்ள மொட்டுகள் இறத்தல், தண்டு வெடித்தல் மற்றும் பழங்கள் சிதைவுறுதல்.

கந்தகம் - Sulphur: இலைகள் வெளிர்ப்பச்சை நிறத்தில் இருக்கும். நரம்புகள் வெளிர்ப்பச்சை நிறத்தில் இருக்கும். இலைப் புள்ளிகள் காணப்படாது.

மாங்கனீசு - Manganese: இலைகள் வெளிர் நிறத்தில் இருக்கும், நரம்புகள் அடர் பச்சை நிறத்தில் வலைபோல இருக்கும், இளம் இலைகளில் நரம்புகளுக்கு இடையில் மஞ்சள் புள்ளிகள், பின்னர் பழுப்பு நிறமாக மாறுதல்.

துத்தநாகம் - Zinc: இலைகள் வெளிரிஇருக்கும், மெல்லிய சிறுத்த நரம்புகள் அடர் பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் மற்றும் விளிம்புகளில் கருமையான புள்ளிகள் இருக்கும். இலைகள் சிறியதாகி, கணுக்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து குட்டையாக வளரும் (ரோசெட் போன்ற அமைப்பு).

மெக்னீசியம் - Magnesium: இலை விளிம்புகளிலிருந்து வெளிர் நிறம்
தொடங்கியிருக்கும். புள்ளிகள் இல்லை. விளிம்புகளில் வளைந்த மடிப்புகள் இருக்கும். சத்து மிகவும் குறைவாக இருந்தால் இலைகள் இறந்து விழும்.

பாஸ்பரஸ் - Phosphorus: செடி சிறுத்தும் மற்றும் அடர் பச்சை நிறத்திலும் இருக்கும். தீவிர பாஸ்பரஸ் குறைபாடு இருந்தால் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறும். இலையின் கீழ் செம்பழுப்பு (Bronze colour) நிறம்.

கால்சியம் - Calcium: தாவரம் அடர் பச்சை. வெளிரிய மென்மையான இலைகள். நுனிகளில் இருந்து காயத்தொடங்கும். இறுதியில் இலை தளிர்கள் இறந்துவிடும்.

இரும்பு - Iron: இளம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் மைய நரம்புகள் பச்சை நிறத்தில் இருக்கும்.

தாமிரம் - Copper: நரம்புகளுக்கு இடையில் இலை வெளிர் இளஞ்சிவப்பு நிறமாக காணப்படும். இலைகள் வாடி உதிர்ந்து விழும்.

மாலிப்டினம் - Molybdenum: இலைகள் வெளிர்ப்பச்சை / எலுமிச்சை மஞ்சள்/ஆரஞ்சு நிறரமாக இருக்கும். நரம்புகளைத் தவிர முழு இலையிலும் புள்ளிகள் காணப்படும். இலையின் அடியில் இருந்து பிசுபிசுப்பான திரவம் வடியும்.

பொட்டாசியம் - Potassium: இலைகளின் நுனி மற்றும் விளிம்புகளில் சிறிய புள்ளிகள் காணப்படும், புள்ளிகள் துரு நிறத்தில் மாறும், இலையின் நுனி மடிந்து காணப்படும்.

நைட்ரஜன் - Nitrogen: செடி வளர்ச்சி குன்றியிருக்கும். தண்டுகள் மிகவும் வெளிரிக் காணப்படும். வெளிர்ப்பச்சை / வெளிர் மஞ்சள் நிறத்துடன் கூடிய நிமிர்ந்த இலைகள். அதிக பற்றாக்குறை இருப்பின் இலைகள் கருகி காணப்படும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் மிக எளிமையாக முறையற்ற ஊட்டச்சத்து அல்லது பற்றாக்குறையான ஊட்டச்சத்தின் அறிகுறிகளாக தாவரங்கள் வெளிப்படுத்தும் இதை கவனத்தில் கொண்டு முறையாக ஊட்டச்சத்து மேலாண்மையை கடைப்பிடித்தால் இவற்றினை சரி செய்து ஆரோக்கியமான தாவர வளர்ச்சிக்கு வழிவகை செய்யலாம் ...

நன்றி
P.சத்தீஸ்குமார் குடியேற்றம்...

More articles